அழகிய கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம்
கிராமம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, பசுமையான வயல் வெளியும், வெள்ளந்தியான மக்களும்தான். அது போன்ற ஒரு அழகிய 200 குடும்பங்கள் கொண்ட கிராமம்தான் இது. இந்த மக்கள் கடின உழைப்பாளிகள். வயலில் நாள் முழுதும், மழையானாலும் கடுமையான கோடை வெயிலாக இருந்தாலும் வேலை பார்ப்பது இவர்களுக்கு சாதாரணம். ஆமாம் எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியாத ஒன்று. இந்த உடல் உழைப்பும், அவர்களின் சாதாரண பாரம்பரிய உணவு பழக்கமும்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு காரணம். இருந்தாலும் வயது முதிர்ச்சியினால் வரும் மூட்டு...