அழகிய கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம்
கிராமம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, பசுமையான வயல் வெளியும், வெள்ளந்தியான மக்களும்தான். அது போன்ற ஒரு அழகிய 200 குடும்பங்கள் கொண்ட கிராமம்தான் இது.
இந்த மக்கள் கடின உழைப்பாளிகள். வயலில் நாள் முழுதும், மழையானாலும் கடுமையான கோடை வெயிலாக இருந்தாலும் வேலை பார்ப்பது இவர்களுக்கு சாதாரணம். ஆமாம் எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியாத ஒன்று. இந்த உடல் உழைப்பும், அவர்களின் சாதாரண பாரம்பரிய உணவு பழக்கமும்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு காரணம்.
இருந்தாலும் வயது முதிர்ச்சியினால் வரும் மூட்டு வலி, மூட்டு தேய்மான காரணங்களால் கணிசமாக பெரியவர்கள்அவதிப்படுவது சாதரணமாக காண முடிகிறது.அவர்களுக்கு இதற்கான காரணங்கள் பற்றியும், அதற்கான மருத்துவ சிகிச்சை பற்றியும் பெரும்பாலும் தெரிவதில்லை. இன்றைய மருத்துவ உலகில் மூட்டு வலியிலிருந்து முழுவதும் வெளியில் வர தீர்வு உண்டு என்று சொன்னால் அவர்களால் முதலில் நம்ப முடிவது இல்லை. தீர்வு உண்டு என்று தெரிந்தாலும் அதற்கான சிகிச்சை எங்கு கிடைக்கும் என்பது தெரியாமல்தான் இருக்கிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாமல் போய் விடுமோ என்று பயம்தான் அவர்களை மருத்துவமனைக்கு செல்லாமல் தடுக்கிறது. செல்ல வேண்டும் என்று முடிவு செய்தாலும் அவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருப்பதால் அழைத்து செல்ல,மருத்துவமனையில் உடன் தங்க யாரும் எளிதில் முன் வருவது இல்லை.
இதனை மனதில் கொண்டுதான் இமயம் மருத்துவமனை கிராமத்திற்கே சென்று அவர்களுக்கு ஏற்படும் அத்தனை சந்தேகங்களையும் தீரத்து வைத்து ஆறுதல் சொல்லி அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்து திரும்ப அவர்கள் வீட்டிற்கே கொண்டு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இப்பொழுது ஒரு சந்தேகம் வரும், இதற்கெல்லாம் நிறைய செலவாகுமே அதனை எப்படி சாதாரண கிராம விவசாய மக்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று.
முதல் அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுதும் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும். மருத்துவ மனையில் தங்கும் செலவு, உணவிற்கான செலவை இமயம் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது. ஒரு வாரத்தில் சாதாரணமாக மற்றவர்களைப்போல நடக்க முடியும், சம்மணம் போட்டு உட்கார முடியும். அனைத்து விவசாய வேலைகளையும் முன்பு போல செய்ய முடிகிறது என்று இங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சொல்வதை கேட்க முடிகிறது.
16ஜூன்2019அன்று நடைபெற்ற இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாமில் மருத்துவர். மதன்குமார் அவர்கள் 200 நபர்களை பரிசோதனை செய்து ஆலோசனையும், தேவையான மருந்து மாத்திரைகளையும் வழங்கினார்கள். அவர்களில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். அனைருக்கும் நாமக்கல் இமயம் சிறப்பு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்.
Comment (1)
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam viverra euismod odio, gravida pellentesque urna varius vitae, gravida pellentesque urna varius vitae.
Comments are closed.